search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு பரிசு"

    • அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள நெக்குந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர்

    பானுப்பிரியா நாராயணன் கலந்துகொண்டு, பள்ளி அளவில் படிப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.

    நிகழ்ச்சியல், ஊர் பிரமுகர்கள் சீனிகவுண்டர், சின்னசாமி, வாசு, மாரியப்பன், கவுன்சிர் வேடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • துறையூரில் கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்
    • நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம், கும்மி, உள்ளிட்டவைகளுக்கு மாணவ, மாணவியர் சிறப்பாக நடனமாடினர்

    திருச்சி:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக கலைத் திருவிழா என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்தல், ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் பிற துறைகளில் ஆர்வத்தினை உண்டாக்குதல் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் வரவேற்றார்.

    துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமை தாங்கி கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் நியமனத் குழு தலைவர் மெடிக்கல் முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சரண்யா மோகன் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் துறையூர் வட்டார கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரை பயிலும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம், கும்மி, உள்ளிட்டவைகளுக்கு மாணவ, மாணவியர் சிறப்பாக நடனமாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறப்பாக செயல்பட்டதால் பாராட்டு
    • வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடந்தது

    வேலூர்:

    வேலூர் 10-ஆவது பட்டாலியன் என்.சி.சி. படையில் சிறந்து விளங்கிய அலுவலர்கள், மாணவர்களுக்கு தமிழ்நாடு என் சி.சி. துணை இயக்குநரக ஜெனரல் பாராட்டு தெரிவித்தார்.

    வேலூர் காட்பாடி காந்தி நகரி லுள்ள 10-ஆவது பட்டாலியனில் சிறந்து விளங்கிய தேசிய மாணவர் படைஅலுவலர்கள், என்சிசி மாண வர்களை பாராட்டும் நிகழ்ச்சி வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில்,தமிழ்நாடு என்சிசி துணை இயக்குநரக ஜெனரல் அடுல்குமார் ரஸ்டோகி பங்கேற்றார். அவருக்குகல்லூரி என்சிசி மாணவர்கள் துப் பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    தொடர்ந்து, என்சிசியில் சிறப் பாக பணியாற்றிய அலுவலர்கள், வேலூர் 10-ஆவது பட்டாலியன் சார்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற என்சிசி ஊரீஸ் கல்லூரி மாணவி சத்தியப்பிரியா, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி என்சிசி மாணவர் கரண்குமார் ஆகியோருக்கும், முகாமில் சிறந்து விளங்கிய என்சிசி மாணவர்கள் அருண், ஸ்ரீகாந்த் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கினார்.

    சென்னை 'அ' பிரிவு குரூப்கமாண்டர் ஜர்னைல் சிங், காட்பாடி 10-ஆவது பட்டாலிய னின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷர்மா ஆகியோர் சிறப்பாக பணி யாற்றிய பேராசிரியர்களை கவுரவித்தனர். முன்னதாக, கல்லூரியின் நிதி காப்பாளர் எஸ்.கேலப்நோபுள் சந்தர் வரவேற்றார்.

    கல்லூரித் தலைவர் ஹெச்.ஷர்மாநித்யானந்தம் கல் லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கல்லூரித் துணை முதல்வர் ஜெ.ஆனிகமலாஃபிளா ரன்ஸ் தொடக்க உரையாற்றினார்.

    என்.சி.சி. அலுவலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். ஊரீஸ் கல்லூரி என்சிசி அலுவலர் சி.ஞானலின்ஷைனி நன்றி கூறினார்.

    • செங்கத்தில் விளையாட்டு போட்டி நடந்தது
    • மார் 500 பேர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி.சுந்தரபாண்டியன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார், பேரூர் செயலாளர் சீனுவாசன் உள்பட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் அணி சார்பில் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.

    இதில் பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி திருப்பத்தூர் லிங்கண்ணமணி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் ஸ்பார்க்பிரபாகரன் தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர் சசிகுமார் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கோ. வெங்கடேசன், மாவட்டத் தலைவர் சி.வாசுதேவன், கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.

    க்ஷ நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், தண்டபாணி, பி.ஆர்.தேவராஜன், பாண்டியன், லிங்கண்ணமணி, உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • என் குப்பை எனது பொறுப்பு என வாசகம்
    • ஏாளமானோர் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களிடையே 'என் குப்பை எனது பொறுப்பு" பள்ளியின் தூய்மையில் மாணவர்களின் பங்கு நகரின் தூய்மையில் மக்களின் பங்கு மற்றும் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் மாணவர் மற்றும் மாணவிகளுடையே பேச்சு போட்டி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். இப்போட்டியில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாணவி களுக்கிடையே பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    இதில் முதல் 4 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி மற்றும் நகர மன்ற தலைவர் காவியா விக்டர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.

    மேலும் இவ்விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பொறுப்பாளர் அன்பழகன், நகராட்சி பொறியாளர் கோபு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், சுய உதவி குழு உறுப்பிர்கள் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 74 மாணவர்கள் பயனடைந்தனர்.
    • புத்தகங்களும் வழங்கினர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கினர்.

    கீழ்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரவின் குமார் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 74 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் கீழ்குப்பம் ஊராட்சி துணைத்தலைவர் அமுதா ராமமூர்த்தி வார்டு உறுப்பினர்கள் கோகுல்ராஜ் சுமதி ஜெயராமன் நதியா கௌதம் ஜெயந்தி நானும் மூர்த்தி பூர்ணிமா மாரியப்பன் வெங்கடேசன் ஜான்பீட்டர் ஜெயக்குமார் மற்றும் பெற்றோர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தலைமை ஆசிரியா் அசத்தல்
    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை 15 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா்.

    கோவை,

    கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுலட்சுமிநாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.

    கடந்த 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை 15 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியா் லட்சுமணசாமி, ஆசிரியா் வைரவபாண்டி ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.இந்த பள்ளி அமைந்துள்ள கிராமத்தின் மொத்த மக்கள்தொகையே 500-க்குள்தான் உள்ளது. கிராம மக்களில் பெரும்பாலானோா் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளா்களாகவும் உள்ளனா்.அருகில் உள்ள கிராமங்களிலும் அரசுப் பள்ளிகள் இருப்பதால், மேட்டுலட்சுமிநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த குழந்தைகள் மட்டுமே இந்த பள்ளியில் சேருகின்றனா். இந்த பள்ளியில் மாணவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன.

    இங்கு தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவா்கள் உயா்நிலைக் கல்விக்காக அக்கநாயக்கன் பாளையத்துக்கும், மேல்நிலை கல்விக்காக லட்சுமி நாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்கின்றனா்.இந்நிலையில், இந்த பள்ளியின் மாணவா் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பரிசுத் தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறாா் தலைமை ஆசிரியா் லட்சுமணசாமி. அதன்படி 2022-2023 -ம் கல்வியாண்டில் சேரும் மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக துண்டுப் பிரசுரம் அச்சடித்து கிராமத்தில் விநியோகித்து வருகிறாா்.

    இது குறித்து அவா் கூறும்போது,கடந்த ஆண்டும் இதுபோன்ற பரிசுத் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி 3 மாணவா்கள் சோ்ந்தனா். அவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை எனது ஊதியத்தில் இருந்து வழங்கினேன். இந்த ஆண்டு எத்தனை மாணவா்கள் சோ்ந்தாலும் அவா்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளேன்.

    எங்கள் பள்ளி அமைதியான சூழலில், மரங்கள் நிறைந்த வளாகம், பரந்த விளையாட்டு மைதானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட வசதிகள் இருக்கக் கூடிய பள்ளியாக உள்ளது. இதைக் கூறி மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பிரசாரத்தை நடத்தி வருகிறேன். வரும் 13-ந் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது. அன்று முதல் மாணவா்கள் சோ்க்கப்படுவாா்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றாா்.

    ×